ஜனவரி மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 573 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 17.5 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 487.6 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மூலம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 613.8 மில்லியன் டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.