உலகம்

வரலாற்று சாதனை படைத்த ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப் விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் IPL டி20 கிரிக்கெட் தொடர் போல், அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டுத் தொடர் NFL ரக்பி ஆகும்.

போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் என பில்லியன் கணக்கான மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம். தொடரின் இறுதிப்போட்டி சூப்பர் பவுல் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் பொதுவிடுமுறை கூட அளிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த சூப்பர் போட்டியைக் காண ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மைதானத்திற்கு வந்தார். லியோனல் மெஸ்ஸி, டாம் பிராட்டி, எலான் மஸ்க், பிராட்லி கூப்பர் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனர்.

மைதானத்தில் மொத்தம் 74,000 பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். இப்போட்டியில் Philadelphia Eagles அணி 40-22 என்ற கணக்கில் Kansas City அணியை வீழ்த்தியது. சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் எந்த ஜனாதிபதியும் கலந்துகொண்டதில்லை. ட்ரம்ப் பங்கேற்றதன் மூலம் முதல் அமெரிக்க ஜனாதிபதி எனும் வரலாற்று சாதனையை படைத்தார். 1980களில் NFL அணியை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *