இலங்கை

குவைத் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி – முதலீடு குறித்து கலந்துரையாடல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார திசாநாயக்க, குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அஹ்மத் அப்துல்லா அல் அஹ்மத் அல் சபாவை சந்தித்தார். நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை சுற்றுலாத் துறையில் முதலீடு வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைத் திறந்துள்ளது என்று குவைத் பிரதமர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது சந்தைகளை பன்முகப்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது. இந்த இலக்குகளை அடைவதற்கான புதிய உத்திகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தையும் விவாதித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதியைப் பெறுவதில் குவைத் அரசு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக குவைத் பிரதமருக்கு ஜனாதிபதி திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

சுமார் 155,000 இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்தில் வசிக்கின்றனர். அவர்கள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்கு பங்களிப்பதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை கணிசமாக வலுப்படுத்துவதாகவும் அரச தலைவர் குறிப்பிட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிப்ரவரி 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *