இலங்கை

ஜேர்மனியில் உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம்

ஜேர்மனி (Germany) – முனிச்சில் நகரத்தில் கார் மக்கள் கூட்டத்திற்குள் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவராத நிலையில், 15 மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறுயுள்ளதுடன், அவர்களில் பலர் கவலைக்கிடமாகவும், மோசமான நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைள் இடம்பெற்று வருவதாகவும், காரின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத தாக்குதலா விபத்தா என்பது குறித்து தெரியவராத நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கமான வெர்டியுடன் இணைக்கப்பட்ட பேரணிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நகரத்தில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு ஆரம்பிக்கபடவிருந்த நிலையில், அமெரிக்க பிரதி தலைவர் ஜே.டி. வான்ஸும் உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இன்று வரவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு மாநாட்டு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் (1 மைல்) தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *