இலங்கை

யாழ் நூலகத்தை நவீனமயமாக்க 100 மில்லியன் நிதி

யாழ்ப்பாணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget – 2025) முன்மொழிவின் கீழ், யாழ். பொது நூலகம் மற்றும் ஏனைய பிராந்திய நூலகங்களின் மேம்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக நூலகம் ஒன்று தீவைக்கப்பட்டது. அதன் வடு இன்னும் அந்த மக்களின் மனதில் இருக்கின்றது. அதற்கு நாங்கள் நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.

எனவே, அந்த பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்தவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *