இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று சற்று குறைவடைந்துள்ளது.
இன்றைய (21.02.2025) நிலவரத்தின் படி 1 அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 872,899 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,800 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 246,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 28,240 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 225,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 215,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 233,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 216,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.