இலங்கை

பாதாள உலகத்திற்கு அரசியல் ஆதரவு!

பாதாள குழுக்களால் நடத்தப்படும் கொலைகள் விரைவில் நிறுத்தப்படும் என்றும், தொடர்ந்து அவ்வாறு செய்தால், பாதாள உலகத்தை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர்  பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

கருத்து வெளியிட்ட அவர்,

“பாதாள உலகம் அரசியல் ஆதரவின் பேரில் பிறந்தது. அதன் மூலமாக தற்போது பராமரிக்கப்படுகிறது, மற்றும் கட்டமைக்கப்படுகிறது.  நாடு இப்போது பாதாள உலகப் பிரச்சினையுடன் போராடி வருகிறது. பாதாள உலகப் பிரச்சினையை பொலிஸாரின் நடவடிக்கையால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.

பதில் என்ன என்பதை நாங்கள் மக்களுக்கு சொல்வோம். ஆனால் இப்போது நாங்கள் பொலிஸ் நடவடிக்கையில் தலையிடுகிறோம். பாதாள உலகத்தால் அரசாங்கத்துடன் தொடர்பை தற்போது ஏற்படுத்த முடியாது உள்ளது. எனவே இப்போது பாதாள உலகம் அரசாங்க ஆதரவு இன்றி காணப்படுகிறது. பாதாள உலகுடன் தொடர்புடைய தரப்பினர் தயவுசெய்து அதனை நிறுத்தி தங்கள் வாழ்க்கையை சாதாரணமாக கட்டியெழுப்ப கடினமாக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சட்ட வரம்புகளுக்குள் இதை கணிசமான அளவிற்கு அடக்குவதற்குத் தேவையானதை அரசாங்கம் செய்து வரும்” என்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *