இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற இராணுவ வீரர்கள் நாட்டின் பல பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
10 வருட காலப்பகுதியில் 12 ஆயிரம் இராணுவ வீரர்கள் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் உள்ள நிலையில் அவர்களிலேயே அளவிலானோர் தப்பி சென்று சுற்றி திரிவதாக கூறப்படுகின்றது. நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இவ்வாறான இராணுவ வீரர்கள் சிலர் செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.