இலங்கை

குற்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை

குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் (27) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறிப்பி்ட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 சம்பவங்களும் பதிவாகியுள்ளது. 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தலா 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த கால குற்றங்கள் குறித்த தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் அதைப் போன்ற நிலைமையே காணப்படுவதாக ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *