தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக இருந்த தமிழினி, கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.
தீ விபத்தினால் தன் உடம்பில் தீப்பற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணம் விபத்து மரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. தமிழினியின் தகப்பனார் பீ. சண்முகராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கக் கூடும் என்பதால் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். (01) தமிழினி மரணம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.