இலங்கை

மகளிர் தினம் : விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறும் அமைப்பு

மார்ச் 08 அன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம், உலகம் முழுவதும் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக WHO என்ற உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மகளிர் தினத்தின் இந்த ஆண்டுக் கருப்பொருள், ‘அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு: உரிமைகள். சமத்துவம். அதிகாரமளித்தல்’, என்பதாகும்.

யாரும் பின்தங்காத எதிர்காலத்திற்காக, அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் சம உரிமைகள், அதிகாரம் மற்றும் வாய்ப்புகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு, உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில், சமூகங்களின் வளர்ச்சியும் மேம்பாடும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில், பெரும்பாலான நாடுகளில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பில் பாலின இடைவெளி குறைந்துள்ளது.

தசாப்தங்களில், பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. தாய்வழி இறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்துள்ளது. 2010 முதல் 2020 வரை, உலகளவில் 12 வீத சரிவுடன் ஒப்பிடும்போது பிராந்தியத்தில் 41வீத சரிவு ஏற்பட்டுள்ளது எனினும், இலக்குக்கான பயணம் இன்னும் முடிவடையவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று, மையம் தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளும் உலகளாவிய பாலின சமத்துவமின்மை குறியீட்டில் உயர்ந்த இடத்தில் உள்ளன.

40வீத பெண்கள் தங்கள் வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிரகொண்டுள்ளனர். இது மனநல சவால்களுடன் சேர்ந்து HIV போன்ற தொற்று நோய்களின் அபாயங்களை அதிகரிக்கிறது. நெருக்கடி மற்றும் அவசர காலங்களில், நடமாட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு காரணிகளால் ஆண்களை விட பெண்களின் சுகாதார அணுகல் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது.

பிராந்திய நாடுகளில் 60வீத பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், குறிப்பிடத்தக்க விகிதம் பெண்களாவர்.

கிராமப்புறங்கள், சுகாதார சேவைகளை அணுகுவதில் குறிப்பிட்ட தடைகளை எதிர்கொள்கின்றன, அங்கு போதுமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட பணியாளர்கள் இல்லை.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், WHO SEARO ‘4P’ அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.

1) ஊக்குவித்தல், கல்வி, நீர் மற்றும் சுகாதாரம் மற்றும் தொடர்புடைய துறைகளில் பெண்கள் Set featured imageமற்றும் சிறுமிகளில் முதலீட்டை ஆதரித்தல்.

2) வழங்குதல்: பூர்த்தி செய்யப்படாத சுகாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அணுகல் தொடர்பான தடைகளை நிவர்த்தி செய்தல்.

3) பாதுகாத்தல்: கொள்கை திட்டமிடல் மற்றும் தயார்நிலையை ஊக்குவிக்க முடிவெடுப்பதில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல்.

4) சக்தி மற்றும் செயல்திறன்: இலக்கு நடவடிக்கைக்காக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சுகாதார அபாயங்களின் முக்கிய இடங்களை அடையாளம் காணுதல் ஆகிய அணுகுமுறைகளே அவையாகும் என்று உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *