இலங்கை

விவசாயிகளுக்கான பணம் தொடர்பில் புதிய அறிவித்தல்

வெள்ளத்தால் அழிந்த பயிர்களுக்கான நிவாரணப் பணம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் புதிய அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

2024 நவம்பர் மாதத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 11ஆம் திகதியிலிருந்து 53,511 விவசாயிகளுக்கு 61,071 ஏக்கர் விவசாய நிலங்களுக்காக 952 மில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

பாரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன.

அந்த மாவட்டங்களில் பயிர் பாதிப்பு நிவாரண நிதியை விரைவாக விடுவிடுவிப்பதற்காக கமநல சேவைகள் நிலையங்களின் சிபாரிசுகள் கருத்திற் கொள்ளப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி செயல்பட்டு, அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

செயற்பாடுகளின் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் மற்றும் வெளிப்படையுடன் மேற்கொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கமநல சேவை மத்திய நிலையங்களின் சிபாரிசு செய்யப்பட்ட விவசாய பாதிப்பிற்காக மாத்திரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

விவசாயிகளை அடையாளம் காணும் பிரச்சினை, தேசிய அடையாள அட்டை இலக்கங்களில் உள்ள பிரச்சினை , வங்கிக் கணக்கு விபரங்கள் பிழையானவை, மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசு முழுமை பெறாமை, பாதிப்பு அறிக்கையிடல் முறையாக மேற்கொள்ளப்படாமை உட்பட சிறு சிறு குறைபாடுகளுடன் காணப்பட்ட ஆவணங்களுக்காக நிவாரணம் வழங்குவது இடை நிறுத்தப்பட்டது என அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *