உலகம்

அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார்.  வரிவிதிப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது அமெரிக்காவில், ஆண்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டொலர் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற நடைமுறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வணிகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்(Howard Lutnick) தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டொலருக்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் இருக்க கூடாது என்பதே ட்ரம்பின் இலக்கு. இந்த இலக்கை நிறைவேற்றவே பணியாற்றி வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். வரி ரத்து செய்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, “அதை அமெரிக்கர்கள் அல்லாத மற்றவர்களை வைத்து ஈடு செய்வோம்” என அவர் பதிலளித்துள்ளார்.

முன்னதாக குடியரசு கட்சி எம்.பிக்கள் மாநாட்டில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்கா குடி மக்களுக்கு தனிநபர் வருமான வரி இரத்து செய்யப்படும்.  ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, இறக்குமதி பொருட்களுக்கும் அதிக வரி விதிக்கப்படும்” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *