நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 57.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில், சேவைத் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 71.1 ஆக சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் உற்பத்திக்கான சுட்டெண் 2024 நவம்பரில் 53.3 ஆக பதிவாகியுள்ளது. புதிய கொள்வனவு கட்டளைகள், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.