உலகம்

பரஸ்பர வரி அறிவிப்பு! ட்ரம்பின் நகர்வு

டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) அடுத்த வாரம் சர்வதேச நாடுகளுக்கு இடையில் பரஸ்பர வரியை அறிவிப்பேன் என அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே ட்ரம்ப் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

அண்டைய நாடுகளுக்கு இறக்குமதி வரிவிதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றார்.

கனடா, சீனா போன்ற நாடுகள் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்கா வர்த்தகப் போரின் விரிவாக்கமாக, அடுத்த வாரம் பரஸ்பர வரி விதிக்க திட்டமிட்டுள்ளேன்.

மற்ற நாடுகளுடன் நாம் சமமாக நடத்தப்படுவோம். நாங்கள் அதிகமாக வரி வசூல் செய்ய விரும்பவில்லை.

நியாயமான வழி தான் என்று நான் நினைக்கிறேன் அத்துடன் இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

எங்களிடம் கட்டணம் வசூல் செய்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூல் செய்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

கனடா, மெக்சிகோ நாட்டு பொருட்களுக்கு புதிதாக 25 சதவீதம் இறக்குமதி வரியை டிரம்ப் விதித்திருந்த நிலையில், இறுதியில், அவர் புதிய இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தம் செய்து உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *