உலகம்

ட்ரம்பிற்கு ஹமாஸ் பதிலடி

பணய கைதிகள் விவகாரத்தில் மிரட்டலுக்கு இடமில்லை என ட்ரம்புக்கு(donald trump) ஹமாஸ் (hamas)பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின்(us) ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், காசாவில்(gaza) பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் சனிக்கிழமை மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என தெரிவித்தார்.

காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் எகிப்து நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் மிரட்டலாக கூறினார். இந்த பேச்சுக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. ட்ரம்பின் எச்சரிக்கைக்கு அமைப்பின் மூத்த செய்தித் தொடர்பாளர் சமி அபு ஜூரி அளித்துள்ள பதிலில், மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளார்.

ட்ரம்பின் பேச்சுகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை கடினம் ஆக்குவது மட்டுமே செய்துள்ளது. இந்த விவகாரத்தில், மிரட்டலுக்கான மொழியில் அர்த்தம் இல்லை. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று உள்ளது. இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும். இதுவே, கைதிகளை திரும்ப பெறுவதற்கான ஒரே வழியாகும் என்று ட்ரம்புக்கு நினைவூட்டினார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *