இலங்கை

பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

பாதாள உலகத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் (20) கூடிய 10வது நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்குள் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தினுள் பாதாள உலக கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை நாட்டினுள் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் பெறும் அதிர்வலையை ஏற்பட்டுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட அவரின் சாரதி மற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துப்பாக்கி சூட்டிற்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்வதற்காகவும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, அதற்கு பொதுமக்களின் உதவியும் காவல்துறையினரால் நாடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெறும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்து வெளியாகியுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *