பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் (Gal Ferenbook) என்பவர் இலங்கையில் கொழும்பு விடுதியில் தங்கியுள்ளதாகத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை குற்றங்களுக்கான நீதிக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஹிந்த் ரஜாப் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நபரைக் கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அத்துடன் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையை விடுக்குமாறு இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Paristamilnews.com