அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதற்காக, நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் அமெரிக்க ட்ரம்ப்.
அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சுமார் 1,500 ராணுவ வீரர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.தேசிய அவசர நிலை பிறப்பிக்கும் ட்ரம்பின் ஆணையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பெருமளவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். விடயம் என்னவென்றால், அதைச் செய்துமுடிக்க, பல ஆண்டுகள் ஆகலாம் என்பதுடன், அரசுக்கு செலவும் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.